சேலம் குகையில் உள்ள பஞ்சந்தாங்கி ஏறி பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது-40. இவர் பாம்புக்கறி விற்பதாக அந்தப்பகுதியில் கூறிக்கொண்டு, இவரது வீட்டில் சில பாம்புகளை வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளைக்கு தகவல் வந்துள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வனச்சரகர் பன்னீர்செல்வம், வனவர் மோகனவேலுவுக்கு உத்தரவிட்டார்., அதன்படி இன்று விசாரணை செய்ய சென்ற அதிகாரிகள் குழுவினர், செல்வத்தின் வீட்டில் இருந்த ஒரு கண்ணாடி விரியன், ஒரு நாகபாம்பு, ஒரு சாரைப்பாம்பு, ஒரு ராஜநாகம், ஒரு கோதுமை நாகம் என பலவகையான பாம்புகளை பறிமுதல் செய்தனர்.
பாம்புகளை வைத்து என்ன செய்கிறார் செல்வம்...? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, முதலில் பதில் சொல்ல மறுத்த வானச்சரகர் பன்னீர் செல்வம், பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது,
இல்லறத்தில் அதிக “இன்பம்” அனுபவிக்க இந்த பாம்புக்கறி ஆண்களுக்கு “கூடுதல் வீரியம்” கொடுக்கும் என்று பொது மக்களிடத்தில் புரளியை கிளப்பிவிடுவார். அதே போல தீர்க்க முடியாத எய்ட்ஸ் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் என்றும் வதந்தியை கிளப்பிவிடுவார்.
பின்னர் தன்னுடைய ஆட்கள் மூலம்மாக கண்ணாடி விரியன், ராஜநாகம் போன்ற அபூர்வ பாம்புகளை காட்டி அதன் கறி என்று சொல்லி சாதாரன சாரைப்பாம்பின் கறியை பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட நாங்கள் ஒருவாரமாக செல்வத்தை பின் தொடர்ந்து இவர் பாம்புகறி விற்பதை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் இவரை கைது செய்துள்ளோம்.
தீராத நோய்களையும் தீர்க்கும், இல்லறத்தில் “ஊக்கம்” கிடைக்கும் என்ற பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம், அறிய வகை உயிரினங்களை கொலை செய்து கரியாக சமைக்கும் போது எங்களிடம் சிக்கிக்கொண்டால் உங்களுக்கு கட்டாயம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்’’ என்றார்.
0 comments :
Post a Comment