பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் உள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன. நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன. ஆனால் அவற்றில் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் நம்மை பாதுகாக்கின்றன. இவை `பாகோசைட்' என்று அழைக்கப்படுகின்றன.
இவை நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகின்றன. பாகோசைட் பாக்டீரியாக்களை எப்படி கொல்கிறது என்று தெரியுமா? முதலில் இது பாக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர், பாக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன்பின்னர்தான் பாக்கோசைட் பாக்டீரியாவை அழிக்கிறது.
ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு `ஆப்ஸனின்' என்று பெயர். ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.
ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால், உடலினுள் பாக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில், ரத்தத்தில் வாக்சீனைச் செலுத்தி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.
0 comments :
Post a Comment