புதுடெல்லி: இவ்வாண்டு(2012) இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வழக்குகளில் ஒன்றுக்கு மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 635 வழக்குகளில் 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிகவும் உயர்ந்த எண்ணிக்கை என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இவர்களில் ஒருவர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார். 403 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். 348பேர் மீதான விசாரணை நடைபெற்றுள்ளது. 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 572 பாலியல் வன்கொடுமை வழக்குகளை டெல்லி போலீஸ் பதிவுச் செய்தது. 2010-ஆம் ஆண்டு 466 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இவ்வழக்குகளில் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்18 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் விடுவிக்கப்பட்டனர். 597 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்கின்றனர். 86 பேர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 685 பேரில் 37 பேர் தண்டிக்கப்பட்டனர். 107 பேர் விடுவிக்கப்பட்டனர். 518 பேர் விசாரணையை எதிர்கொள்கின்றனர். 13 பேர் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. 2009-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 675 பேரும், 2008-ஆம் ஆண்டு 604 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009-ஆம் ஆண்டு 82 பேரும், 2008-ஆம் ஆண்டு 52 பேரும் தண்டிக்கப்பட்டனர்.
1 comments :
mmmm
Post a Comment