சென்னை: மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுபற்றி கமிஷனர் திரிபாதியிடமும் நேரில் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ஆலோசனையின் பேரில் மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தார். நேற்று இரவு கடற்கரையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன் கென்னடி என்பவர் காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காதல் ஜோடிகளிடம் சிலர் போலீஸ் என்று மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த ஸ்டீபன் கென்னடி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாண்டி ஸ்டீபன் கென்னடி தகவலின் பேரில் கலங்கரை விளக்கம் அருகில் சென்றார். அங்கு 3 வாலிபர்கள் பணம் பிடுங்கியதை நேரில் பார்த்தார். உடனே அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.
2 comments :
Appadniyaa
என்ன பன்னுனாலும் இவங்க திருந்த மான்டாங்க பாஸ். என்னமோ இந்தியாவை அமெரிக்கா அளவுக்கு உயர்த்தறதா இவங்களுக்கு நினைப்பு.
Post a Comment