லண்டன் : ஏடிஏம்மில் பணம் பெற்றுவந்த காலம் மலையேறி போய், தற்போது தங்கம் பெறும் நிலை வந்து விட்டது என்று கூறினால் அது மிகையல்ல, இதற்கு சான்றாக, இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஏ.டி.எம்மில் தங்கத்தை வழங்கும் மிஷின் நிறுவப்பட்டுள்ளது.
எந்த நாளும், எந்தநேரத்திலும் தங்குதடையின்றி தங்கத்தை நாணயங்களாகவும், கட்டிகளாகவும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் வைக்கப்பட்டுள்ள முதல் கோல்டு வெண்டிங் மிஷின் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோல்டு டு கோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மெஷின், வெஸ்ட்பீல்டு ஷாப்பிங் மாலி்ல் வைக்கப்பட்டுள்ளது. வலுவான ஸ்டீல் மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மெஷின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மெஷினின் மூலம், 1 கிராம் தங்க நாணயம் முதல் கால் கிலோ (அதாவது 250 கிராம்) தங்க கட்டிகளை வரை பெற்றுக்கொள்ளலாம். 1 கிராம் தங்க நாணயம் 40 பவுண்டுகளுக்கும், 250 கிராம் தங்க கட்டி 10,250 பவுண்டுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவுண்டுகளை இதில் நாம் உட்செலுத்தி, தங்கமாக நாம் அதை வெளிக்கொணரலாம்.
பவுண்டுகளை தவிர்த்து, கிரெடிட் கார்டுகளும் செலுத்தி தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. எக்ஸ் ஓரியண்டி லக்ஸ் என்ற ஜெர்மனி நிறுவனம், இந்த கோல்டு டு கோ மெஷின்களை உற்பத்தி செய்து அதை நிர்வகித்து வருகிறது. இந்த மெஷின்கள் ஏற்கனவே, ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment