Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 21, 2011

மலுஞ்சு போச்சு ஆபாச சி டி!

கல்லூரிகள் நிரம்பிய கோவை நகரில் ஆபாச "சிடி' புழக்கம் அதிகரித்துள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தனியார் விடுதிகள், வீடுகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, ஆபாச "சிடி'க்கள் "டோர் டெலிவரி' செய்யப்படுகின்றன. இதற்கான ஏஜன்ட்கள் மற்றும் "சப்ளை பாய்'கள் பெருகியுள்ளனர். ஒருமுறை சப்ளை செய்த "சிடி'யை இரண்டு நாள் கழித்து திரும்ப பெற்றுக்கொள்ளும் ஏஜன்ட்கள், மாதம் முழுவதும் 10 முதல் 15 "சிடி'க்களை சப்ளை செய்கின்றனர். இதற்கான கட்டணமாக மாதம் ரூ.200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஆபாச "சிடி' தேவை அதிகரித்துள்ள நிலையில் கோவை நகரில் ஆபாச "சிடி' மற்றும் புதுப்பட "சிடி'யை நகலெடுப்போரும் பெருகியுள்ளனர். நாளொன்றுக்கு நகரில் மட்டும் 20 ஆயிரம் "சிடி' நகலெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பீளமேடு, சரவணம்பட்டி, கரும்புக்கடை பகுதிகளில் "சிடி' நகலெடுப்பு மையங்கள் ரகசியமாக செயப்படுகின்றன.

மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், விபச்சார விடுதி நடத்துதல், லாட்டரி வியாபாரம், ஆபாச "சிடி' தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்கள் மலிந்துவிட்டன. கிரிமினல்களுடன் கைகோர்த்து மாமூல் பெறும் போலீஸ் அதிகாரிகளை மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வேடிக்கை பார்ப்பது, வியப்பாக உள்ளது.

மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் இன்ஸ் பெக்டர்களில் பலர் லஞ்ச முறைகேடுகளில் ஊறித்திளைக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் குனியமுத்தூர், செல்வபுரம் பகுதிகளில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. பல்வேறு பகுதி ரேஷன் கடைகளில் அரிசியை சேகரிக்கும் ஏஜன்ட்கள் வீடு, குடோன்களில் பதுக்கி கேரளாவுக்கு கடத்துகின்றனர். சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கடத்தல் நடக்கிறது. கோவை நகரைச் சேர்ந்த சீனி, குருவையா, சங்கரன், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், உள்ளூர் ஸ்டேஷன் போலீசாருக்கு மாதம் 3,000 முதல் 10 ஆயிரம் ரூபாயும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு 6,000 ரூபாய் வரையும் மாமூல் தருகின்றனர்.

ஸ்டேஷன் ரைட்டர்கள் மற்றும் ஏஜன்ட்கள் மூலமாக இன்ஸ்பெக்டர்கள் பணம் வசூலிக்கின்றனர். உணவுக்கடத்தல் தடுப்பு போலீசாரை பொருத்தவரை, கடத்தல் தடுப்பு நடவடிக்கையை இரண்டாம் பட்சமாகவே மாற்றிவிட்டனர்; முதல் பணியே மாமூலாக மாறிவிட்டதால், ரேஷன் அரிசி கடத்தல் மதுக்கரை, வாளையார், வேலந்தாவளம், க.க.,சாவடி வழியாக வெளிப்படையாக நடக்கிறது.

கோவை நகரில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் நடக்கிறது. சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரபல பெண் புரோக்கர், தற்போது ஜாமீனில் வெளிவந்து கோவை, பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் விபச்சார விடுதி நடத்துகிறார். அதே போன்று, இதற்குமுன் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சுரேஷ் என்ற நபர், தற்போது சரவணம்பட்டியில் விபச்சார விடுதி நடத்துவதாக கூறப்படுகிறது. வெளிமாநில இளம் பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தும் இவருடன் சரவணம்பட்டி போலீசார் மிக நெருக்கம். மாதம் 20 ஆயிரம் ரூபாய் மாமூல் பெற்று விடுதிக்கு "லைசென்ஸ்' வழங்கியுள்ளனர். சிங்காநல்லூர் பகுதியிலும் விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி, திருநகரில் நேற்று முன்தினம் ரெய்டு நடத்திய போலீசார், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களை கைது செய்தனர்; பல பெண்களை தப்பவிட்டு விட்டனர். இப்போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் இன்னும் இரண்டு விபச்சவிடுதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

மதுக்கடைகளில் மாமூல்: "டாஸ் மாக்' மதுக்கடைகள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு பிறகும் பல பகுதிகளில் மது வியாபாரம் நடக்கிறது. கடைகள் மட்டுமின்றி, பார்களும் எந்த விதிமுறைகளுமின்றி செயல் படுகின்றன, கடை ஒன்றுக்கு மாதம் தோறும் 5,000 ரூபாய் வரை மாமூல் வசூலிக்கின்றனர் சில இன்ஸ்பெக்டர்கள்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!