தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.
"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார்.
சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார்.
கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.
சச்சின் மீண்டும் அசத்தல்சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39
0 comments :
Post a Comment