Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 29, 2011

தனியார் மயமாகப்போகும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில், 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' எனப்படும் சரக்குகளை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைத் துள்ளது, விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு இது முதற்கட்டம் தான்' என, விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். விமான நிலையத்தில் நவீன சரக்கு வளாகம் விரைவில் செயல்பட துவங்கவுள்ள நிலையில், விமான நிலைய ஆணையத்தின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள் ளனர்.தென்னிந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக சென்னை விமான நிலையம் திகழ்கிறது. டில்லி, மும்பையை அடுத்து சென்னை விமான நிலையத்தில் தான் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகம். இந்த வகையில் நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உள்ளது.கடந்த 2009-10ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 5 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். 1.10 லட்சம் விமானங்கள் வந்து, சென்றுள்ளன. மொத்தம் 3.23 லட்சம் டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.கடந்த 10 மாதங்களில் சரக்குகள் கையாள்வதில் இறக்குமதி 15 சதவீதமும், ஏற்றுமதி 35 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதிகரித்து வரும் சரக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 1,800 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நவீன கார்கோ காம்ப்ளக்ஸ் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும். தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் டன்கள் என்ற அளவிலான பொருள்களை கையாளும் திறனில் தான், 'ஏர்கார்கோ' பிரிவு செயல்படுகிறது. நவீன, 'ஏர்கார்கோ காம்ப்ளக்ஸ்' பயன்பாட்டிற்கு வரும்போது, 6 லட்சம் டன்களை கையாள முடியும்.இங்கு, ஆட்கள் சரக்குகளை கையாள்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, அனைத்து பணிகளும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும். இதற்கான ஏ.எஸ்.ஆர்.எஸ். திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள சரக்கு பார்சலை இயந்திரமே இறக்கி, கீழே வைத்துவிடும். இதனால், நேரம் மீதமாவதுடன், சரக்குகள் சேதமடைவதும் தவிர்க்கப்படும்.

இந்நிலையில், 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' எனப்படும் சரக்குகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் கூறியதாவது டெண்டர் விதிமுறைகளை மீறி, ஒரு தனியார் நிறுவனத்திற்கு, 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' செய்வது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சென்னை விமான நிலைய ஆணையத்தின் உயர் பதவிகளில் இருந்த சிலர், ஆணையத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு அலுவலக ரகசியங்களை கொடுத்து வந்தனர்.இதற்கு பிரதிபலனாக, ஓய்வு பெற்றதும் அந்நிறுவனத்தில் பொது மேலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெற்றுக் கொண்டனர். இவர்கள் பதவியில் இருக்கும்போதே, கிரவுண்ட் ஹேண்ட்லிங்கை தனியாருக்கு தாரை வார்க்க தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டனர். ஓய்வு பெற்றதும் அதை செயல்படுத்தி, பல கோடி ரூபாய் வருவாய் வரும் 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்'கை குறிப்பிட்ட தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. இது சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகும். பல எதிர்ப்புகளையும் மீறி, ஏற்கனவே டில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, சென்னை விமான நிலையத்தையும் தனியார் மயமாக்க சில ஓய்வு பெற்ற அதிகாரிகள் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!