Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 16, 2011

இன்று இந்திய அணி அறிவிப்பு. உலக கோப்பை கிரிக்கெட்

சென்னை:உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் (பிப்.18-ஏப்.2) தொடரை நடத்துகின்றன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கடந்த மாதம் அறிவித்தது. இதிலிருந்து 15 பேர் கொண்ட அணி, இன்று சென்னையில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தேர்வு செய்கிறது.மாற்றம் இல்லை: இந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் காயமடைந்திருப்பது கவலை அளிக்கிறது. இவரது காயம் பெரிய அளவில் இல்லை என்பதால், உலக கோப்பை தொடருக்கு முன் குணமடைந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே இவர் 6வது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்பார். ஒருவேளை இவரது காயம் குணமடையாத பட்சத்தில், தமிழக வீரர் முரளி விஜய் வாய்ப்பு பெறலாம்.துவக்க வீரர்கள் சேவக், காம்பிர் நிச்சயம் இடம் பிடிப்பார்கள். "மிடில்-ஆர்டரில்' யுவராஜ், ரெய்னா, விராத் கோஹ்லி, ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, முனாப் படேல், பிரவீண் குமார் என நிறைய வீரர்கள் உள்ளனர். சுழலில் ஹர்பஜன் சிங் நிச்சயம் இடம் பிடிப்பார். இவருக்கு துணையாக அமித் மிஸ்ரா, பியுஸ் சாவ்லா, பிரக்யான் ஓஜா ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவும். "ஆல்-ரவுண்டர்' வீரராக யூசுப் பதான், ரவிந்திர ஜடேஜா உள்ளனர். விக்கெட் கீப்பர் பணியில் தோனிக்கு மாற்று வீரராக, பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக், விரிதமன் சகா உள்ளிட்டோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!