Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 25, 2011

பா.ஜ.க வுக்கு வைத்த ஆப்பு! ரயில்வே??

மும்பை: ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.

நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.

சிறப்பு ரெயில் மூலம்தான் பா.ஜ.க மற்றும் அக்கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் ஸ்ரீநகருக்கு புறப்பட்டிருந்தனர்.

ஜம்முகஷ்மீருக்கு வெளியேயிருந்து போராட்டக்காரகள் எவரும் உள்ளே நுழையாமலிருக்க மாநில அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக மானோர் கஷ்மீருக்கு வந்தால் பிரச்சனை இன்னும் மோசமாகும் எனக் கருதி மத்திய பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரெயில்வே பாதுகாப்பு படையும் மாநில போலீசாரும் இணைந்து பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயிலை திருப்பி அனுப்பினர்.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மஹராஷ்ட்ரா மாநிலத்தை வந்தடைந்தது. அஹ்மத் நகருக்கு அடுத்துள்ள தவ்த் ரெயில்வே ஸ்டேசனுக்கு ரெயில் வந்தபொழுதே முன்னரே தயாராக்கிய திட்டத்தின் படி 2 பெட்டிகள் ரெயிலுடன் இணைக்கப்பட்டது. அவற்றில் 200 போலீசார் ஏறினர். தொடர்ந்து ரெயில் அடுத்துள்ள ஸரோல-கஸர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில் எஞ்சின் பிரித்தெடுக்கப்பட்டு ரெயிலுக்கு எதிர் பக்கம் பொருத்தப்பட்டது.

இங்குதான் ரெயில் பெங்களூருக்கு திரும்பிச் செல்வதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. விழித்திருந்த சிலர் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால், காலம் கடந்துவிட்டது. ரெயில் கர்நாடகா மாநிலம் குல்பர்காவை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் தூங்கிக் கொண்டிருந்த நபர்களுக்கு ரெயில் பெங்களூரை நோக்கி திரும்பிச்செல்வது புரிந்தது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!