Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 8, 2011

பொருளாதார மந்த நிலை?

1970 - 1979 = சிலோன் (இலங்கை) பர்மா, மலேசியா, மாலத்தீவுகள்

1980 - 1989 = வளைகுடா நாடுகள், சிங்கப்பூர்

1990 - 1999 = அமெரிக்கா

2000 - 2007 = இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான்...

2008 - 2010 = ???

ஏறத்தாழ 30 வருடங்களாகத் தொடர்ந்த திரை கடல் ஓடி திரவியம் தேடும் பயணங்கள் கடந்த இரு வருடங்களில் வெகுவாகக் குறைந்ததற்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமென்று சொல்லப்பட்டாலும், உண்மையில் நம்மவர்களின் 'அறிவாதார' மந்தநிலையும் ஒரு காரணம். ஆங்கிலேயரை விரட்டும் உத்தியாக அவர்களின் மொழியைப் புறக்கணிப்பபதும் தேசபக்தி என்று நம்பியதால், சர்வதேச மனிதச் சந்தையில் பின்தங்கியவர்களின் சந்ததியினர், ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட மாயையில் சிக்குண்டு தேசிய மனித வளத்திலும் பின் தங்கினோம்.


பள்ளிப்படிப்பில் SSLC என்பது வாழ்க்கையின் முக்கிய கட்டம்.குறைந்த பட்சம் SSLC தேரியவர்களே வாழ்க்கையிலும் தேரியுள்ளனர் என்பது என் கணிப்பு. (சில விதி விலக்குகள் தவிர) SSLC தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே +1 இல் எந்த குரூப் எடுப்பது என்ற வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் காலகட்டம் அது.

+2 இல் நல்ல மதிப்பெண் பெற்றவர்வர்கள் வசதிக்கேற்ப டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆகலாம். சுமாரான மதிப்பெண்கள் பெற்று செல்வ வசதியிலும் பிந்தங்கியவர்களின் நிலைதான் கொஞ்சம் பரிதாபத்திற்குறியது. தெளிவான குறிக் கோளின்றி B.Sc., M.Sc.,    என்று  படித்துவிட்டு மெடிக்கல்ஸ் ஷாப்பில் உட்கார்ந்திருக்கும் பலரைப் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏனெனில் தற்போதைய காலகட்டத்தில் மருந்தாளுனர் (Pharmacist) ஆவதற்கு 10+2 வருடங்கள் படித்தாலே போதும்.

சில வருடங்களுக்கு முன்பு அபூதாபியிலிருந்து துபை வந்துகொண்டிருந்தபோது அருகிலிருந்த நுன்னுயிரியல் (மைக்ரோபயாலஜி) படித்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். வேலை நிமித்தம் நேர்முக அழைப்பிற்குச் சென்று வருவதாகச் சொன்னார்.வேலை, சம்பளம் இன்னபிற குறித்து விசாரித்தபோது மாதம் 1500 திர்ஹம் சம்பளம் என்றார்.(அப்போது கம்பெனி டிரைவர் வேலைக்கு சுமார் 2500 திர்ஹம் கிடைத்துக் கொண்டிருந்தது). அவர் பேச்சிலிருந்து பூமிக்கடியில் உயிர்வாழும் மண்புழு, பூமியின் எந்த சீதோசன நிலையிலும் தாக்குப்பிடித்து வாழ்கிறது என்பதால், அதிலிருந்து நோய் எதிர்ப்புச் சக்திக்கான எதிர் உயிரியல் மருந்து குறித்த ஆராய்ச்சியை கல்லூரி ப்ராஜெக்ட்டில் தனிநபராகச் செய்திருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைதேன்.

படிப்பு முடிந்து தன்னுடைய எதிர் உயிரியல் மருந்து ஆய்வை சுயமாகவோ அல்லது ஸ்பான்சர்ஷிப் மூலமாகவோ மேம்படுத்தியிருந்தால் மருந்து நிறுவனங்கள் குறைந்தது அவருடையை ஆய்வை நல்ல விலைக்கு வாங்க முன்வந்திருக்கும்.(துபாய்க்கு விசிட்டிங்கில் வருவதற்கு ரூ.50,000-70,000 செலவு செய்திருந்தார்.) இதை யெல்லாம் தற்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் நம்மவர்களில் பலர் எவ்வித குறிக்கோளும் இல்லாமல் ஏதாவதொரு டிகிரி படித்து விட்டால் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம்.இலட்சக்கணக்கில் செலவு செய்து  படிக்க வைக்கும் பெற்றோருக்கும்  தம் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டு என்ன செய்வார் என்று யோசிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

*******
எல்லாம் சரி, வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடனான கல்வி மட்டும் அவசியமில்லை என்பதற்கும் நம்மிடையே பலர் உதாரணமாக இருக்கிறார்களே என்றும்கூட சிலர் கேட்கலாம். நான் அறிந்த பலர், என்னதான் லட்சம் கோடி என்று சம்பாதித்திருந்தாலும் அதற்காக இழந்தவைமுன் இவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்!

இன்று பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்தவர்களிடம் அவர்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எதுவென்று கேட்டால் நிச்சயம் கல்வியின் அருமை பற்றியும் படிக்கச்சொல்லி குட்டிய, திட்டிய ஆசிரியர்களின் பெருமைபற்றியும் மணிக்கணக்கில் பேசுவர்.

***********
சரி, இப்படி ஆளாளுக்கு லெக்சர் எடுத்தால் மட்டும்போதுமா? முந்தைய தலைமுறையினர் இழந்த இழப்புகளை அடுத்த தலைமுறையும் இழக்க வேண்டுமா? என்னதான் தீர்வு என்றும் கேட்கலாம்.

வாழ்க்கையின் முக்கிய கட்டங்களான SSLC, +2 வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே என்ன படித்தால் எத்தகைய பயன்கள் என்ற நிகழ்கால கல்வி நிலவரங்களை சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் பிரபலங்களை சிறப்பு போதகராக (GUEST LECTURE) அழைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் இதுகுறித்த திட்டங்களையும் சான்றோர்கள் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு: எந்தக் கல்வியுமே வீணல்ல என்று நம்புபவன் நான். மேற்சொன்ன உதாரணங்களில் யாரையும் குறைத்து மதிப்பிடும் நோக்கமில்லை.நமதூரில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு வாரம் என்பதால் வாசகர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்காக எழுதியது. 
அபூ அஸீலா 

Reactions:

2 comments :

சிறப்பான பதிவு வாழ்த்துகள்

பணவீக்கம் எப்படி ஒருவனை பாடாய்படுத்தும் என்பதற்கு தற்போதைய நிலவரமே சாட்சி.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!