Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 27, 2011

இந்திய இருட்டு சட்டம்!

புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட நபராக மனுதாரரை கருத முடியாது. அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் பாதிக்கப்பட்டதை ஆதாரங்களுடன் விளக்காமல் இருக்கும் வரை இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட ஐகோர்ட்டுக்கு உள்ள அதிகாரவரம்பை பயன்படுத்த வேண்டும் என கோர முடியாது. தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. டில்லியில் இது அமைந்துள்ளது.

இம்மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதியில்லை. எனவே, இதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.வைகோ தாக்கல் செய்த மனு: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு, 1992ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின், அவ்வப் போது தடை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக, கடந்த மே மாதம் தடை நீட்டிக்கப்பட்டது. தடை விதிக்க போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயத்திற்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டது.தீர்ப்பாயத்தில், என் மனுவை தாக்கல் செய்தேன். சென்னை, ஊட்டியில் தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், கலந்து கொண்டேன். சாட்சிகள் தாக்கல் செய்த மனுக்களின் நகல்களை எனக்கு தீர்ப்பாயம் வழங்கவில்லை. தடை செய்ததற்கு ஆதாரமாக சரியான காரணங்களை மத்திய அரசு காட்டவில்லை, என தீர்ப்பாயத்தில் கூறினேன்.

என் கருத்தை தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உறுதி செய்ய, போதிய காரணங்கள் உள்ளது என தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது. புலிகள்ஆதரவு அமைப்பு, தனி நபர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகளை காரணம் காட்டி, புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என அறிவிக்க முடியாது.
புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களால், குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டன என்பதை நிரூபிக்க, மத்திய அரசு தரப்பில் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!