Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 2, 2011

கட்டுப்பாடு கார்களுக்கு

இந்தியாவில், கார் வைத்திருப்பவர்கள் தங்கள் கார் எந்தளவுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பராமரிக்க வேண்டும் என்பதற்கான, "ஸ்டார்' ஒழுங்கு முறை சான்றிதழை அரசு கொண்டு வருகிறது. பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும் எரிபொருள் சிக்கனத் துறை, வரும் ஆண்டில் கார் தயாரிப்பாளர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும் கட்டாய எரிபொருள் சேமிப்பு மற்றும் முழுமையான பயன்பாட்டிற்கான சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த சான்றிதழ்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும்.

ஏற்கனவே, 2006 முதல், "ஸ்டார்' குறியீடு வழங்கும் முறை உள்ளது. முதலில் மின்சார உபகரணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த குறியீடு தற்போது கார்களுக்கும் வருகிறது. இந்த நடைமுறை வருவதற்கு சில காலம் ஆகலாம் என தெரிகிறது. இருப்பினும், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து, உரிய சான்றிதழ்(ஸ்டார்) பெற்ற பின்னர் தான் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இது குறித்த பேச்சு வார்த்தை, கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் நடந்து வருகிறது. 

தற்போதைக்கு, கனரக மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. முதலில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியவுடன் அடுத்ததாக மற்ற வாகனங்களுக்கு எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை ஆலோசிக்கலாம் என தெரிகிறது. எரிபொருள் சிக்கனத் துறை, ஒவ்வொரு வாகனத்திற்கும் நிரந்தரமான குறிப்பிட்ட எரிபொருள் சேமிப்பு திறன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. கார்களின் தரங்களுக்கு ஏற்ப, "ஸ்டார்' குறியீடு வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான கார்களை வாங்கிக் கொள்ள முடியும். தற்போதைக்கு நீண்ட கால அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 

வரும் 2015ம் ஆண்டிற்குள் ஓரளவு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தலாம் என தெரிகிறது. இந்தியாவில், 13 மில்லியன் கார்கள் இந்திய சாலைகளில் தினந்தோறும் இயங்குகின்றன. இதில், மோசமான பராமரிப்புகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு அதிகம் மாசு விளைவிக்கும் கார்களும் அடங்கும். இந்த சான்றிதழ் கொண்டு வருவதன் மூலம் ஓரளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!