Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 7, 2011

கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் இன்று பெங்களூருவில் துவங்குகிறது. மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 408 கோடி வரை செலவிடப்பட உள்ளது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர், உலககோப்பை முடிந்த, 6 நாட்களில் (ஏப்., 8) துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

புதிய ஏலம்:
கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், அடுத்த தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்தன.

முழுத் தொகை:
இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ. 45 கோடி வரை செலவிடலாம் என்ற விதி <உள்ளது. இதில் கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம். 4 வீரர்களை தக்கவைத்துள்ள மும்பை, சென்னை அணிகள் ரூ. 20 கோடியை மட்டும் பயன்படுத்தலாம்.

"டாப்' பட்டியல்:
கடந்தமுறை இருந்த நட்சத்திர அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, "கிரேடு' (பிரிவு) முறை கொண்டுவரப்பட்டது. இதன் படி முதல் பிரிவில் உள்ள 21 வீரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.81 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் இந்தியாவின் டிராவிட், யுவராஜ், கங்குலி, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் ஆகியோருடன் இங்கிலாந்தின் பிராட், ஆஷஸ் நாயகன் ஆண்டர்சன், சுவான், பீட்டர்சன், இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாவது பிரிவில் (ரூ. 1.36 கோடி) காலிஸ், முரளிதரன், யூசுப் பதான், ஜாகிர் கான், டெய்ட், சங்ககரா ஆகியோரும், 3வது பிரிவில் (ரூ. 91 லட்சம்) காம்பிர், ஹசி, போலிஞ்சர், உத்தப்பா, ஜெயசூர்யா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நான்காவது பிரிவில் (ரூ. 45 லட்சம்) தமிழகத்தின் அஷ்வின், மார்கல், தமிம் இக்பால் ஆகியோர் உள்ளனர்.

கும்ளே விலகல்:
நான்காவது தொடருக்கான ஏலத்தில் இருந்து சமீபத்தில் கும்ளே விலகினார். இருப்பினும் இவர், பெங்களூரு அணியின் ஆலோசகராக தொடர உள்ளார். இந்த அணி காலிஸ், முரளிதரனை அணி குறிவைத்துள்ளதாக தெரிகிறது. தவிர, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், கிளார்க், ஜான்சன், ஹைடன், இங்கிலாந்தின் ஹைடன் ஆகியோரும் இன்றைய ஏலத்தில் இல்லை. தவிர, பாகிஸ்தான் வீரர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது.

யார் எந்த பக்கம்?
டில்லி தக்கவைத்துள்ள சேவக், கேப்டன் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். காம்பிரையும் இந்த அணி விடுவித்து இருப்பதால், கேப்டன் பொறுப்புக்கு கில்கிறிஸ்ட், சங்ககராவை குறிவைத்துள்ளன. காம்பிர், இஷாந்த் சர்மா தவிர, ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், ஷான் டெய்ட், ஸ்டைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மாணவிகளை கவர்ந்த ஸ்ரீசாந்த்
புதியதாக வந்துள்ள கேரளாவை தலைமையிடமாக கொண்ட கொச்சி அணிக்கு பயிற்சியாளராக இருக்க, ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் சம்மதித்துள்ளார். தவிர, கேரளாவின் செயின்ட் தெரசா கல்லூரி உட்பட அனைத்து பெண்கள் கல்லூரி மாணவிகளும், கொச்சி அணிக்கு ஸ்ரீசாந்த்தை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.

 "டாப்-10' வீரர்கள்
நான்காவது தொடருக்கான ஏலத்தில் கெய்ல், மெக்கலம் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக மவுசு காணப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்ச தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டிலும் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என தெரிகிறது.
1. பிரண்டன் மெக்கலம் (ரூ. 1.81 கோடி)
2.கெய்ல் (ரூ. 1.81 கோடி)
3. டிராவிட் (ரூ. 1.81 கோடி)
4. யுவராஜ் (ரூ. 1.81 கோடி)
5. கில்கிறிஸ்ட் (ரூ. 1.81 கோடி)
6. ஆண்டர்சன் (ரூ. 1.81 கோடி)
7. பீட்டர்சன் (ரூ. 1.81 கோடி)
8. காலிஸ் (ரூ 1.35 கோடி)
9. முரளிதரன் (ரூ 1.35 கோடி)
10. ஸ்டைன் (ரூ. 91 லட்சம்)
சீனியர்கள் வாய்ப்பு
இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீசின் ஓய்வு பெற்ற வீரர் லாரா, டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது எல்லோரும் வியக்கும் வைத்துள்ளது. இவ்வரிசையில் இன்றைய ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓய்வு பெற்ற சீனியர்கள் விபரம்:

பெயர்/அணி    வயது
1.லாரா (வெ.இண்டீஸ்)    41 வயது 8 மாதம்
2. ஜெயசூர்யா (இலங்கை)    41 வயது 6 மாதம்
3. கில்கிறிஸ்ட்(ஆஸி.,)    39 வயது 2 மாதம்
4. கங்குலி (இந்தியா)    38 வயது 6 மாதம்
5. கிப்ஸ் (தெ.ஆப்.,)    36 வயது 11 மாதம்
5. ஸ்டைரிஸ் (நியூசி.,)    35 வயது 6 மாதம்
6. மெக்ராத் (ஆஸி.,)    35 வயது 3 மாதம்

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!