டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழக அகடமி கவுன்சில் கூட்டம், துணைவேந்தர் தரீன் தலைமையில் நடந்தது. இதில், நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி இந்தாண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், உலக அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வாங்முக்தா முத்தையா, வேதியியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக அண்மையில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன், மருத்துவத் துறையின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக செயற்குழுவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், டெண்டுல்கர் உட்பட நான்கு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனைத்து ஏற்பாடுகளை, புதுச்சேரி பல்கலைக் கழகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment