Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 30, 2011

சாதிக்க துடிக்கும் இளம் வீரர்கள்,ஹர்பஜன்

சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்ட இளம் வீரர்கள் உலக கோப்பை தொடரில் சாதிப்பார்கள் '' என, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் அசத்தியது. ஒருநாள் தொடரை வெல்லவில்லை என்றாலும், கடைசி வரை போராடித்தான் வீழ்ந்தது. இந்த அனுபவம் குறித்து ஹர்பஜன் சிங் கூறியது,பொதுவாக பவுலர்கள் தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று தான் கேப்டன்கள் எதிர்பார்ப்பார்கள். இது தான் அடிப்படை. முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போதைய கேப்டன் தோனி இருவருமே, என்னிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தனர். ஸ்ரீநாத், ஜாகிர் கானிடம் கங்குலி எதிர்பார்த்தது என்னவோ, அதைத்தான் தோனி இப்போது என்னிடம் எதிர்பார்க்கிறார்.

அடுத்து பவுலிங்கிற்கு ஏற்ப சரியாக பீல்டிங் அமைக்க வேண்டும். இதில் இரு கேப்டன்களுமே, என் மீது நம்பிக்கை வைத்து, பீல்டிங்கை என் விருப்பப்படி விட்டுவிடுவார்கள். இதனால் தான் சிறப்பாக செயல்படுகிறேன். இந்த இரு கேப்டன்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், தோனி அமைதியாக இருப்பார். ஆனால், கங்குலி தனது உணர்ச்சிகளை உடல் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி விடுவார்.

பேட்டிங்கின் போது ஆரம்பத்தில் சரியான முறையில் பந்து வந்தால் போதும், அதை அடித்து விடுவேன், அவ்வளவு தான். ஆனால், இப்போது பந்தை நன்கு கவனித்து பிறகு அடிக்க முயற்சிக்கிறேன். பந்துகள் அளவுக்கு அதிகமாக "பவுன்ஸ்' ஆன தென் ஆப்ரிக்காவில், என்னைப் பொறுத்தவரையில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இது உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில் லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2002ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மோசமாக இழந்து திரும்பியது. பின் 2003 உலக கோப்பை தொடரில், முற்றிலும் வித்தியாசமாக செயல்பட்ட இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. இதே போல மீண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் உண்மையில் நம்புகிறேன். அதைவிட ஒருபடி மேலாக கோப்பை வென்றால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பரிசாக அமையும். இதற்காக ரசிகர்கள் எங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேலான ஆதரவை தருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

2003ல் அணியில் இருந்த ஜாகிர் கான், நெஹ்ரா, சேவக் ஆகியோர் அப்போது, குறைந்த அளவிலான போட்டிகளில் தான் பங்கேற்று இருந்தனர். இம்முறை "சீனியர்' சச்சின், ஆலோசகராக கங்குலி போன்றவர்கள் எங்களுடன் உள்ளனர். தவிர<, இளம் வீரர்கள் ரெய்னா, யூசுப் பதான், விராத் கோஹ்லி ஆகியோரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறோம். நெருக்கடியான நேரங்களில் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் போதிய அனுபவம் பெற்றுள்ள இவர்கள், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!