இணையதளம் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் (இ-ஃபண்ட்) செய்ய வங்கி கணக்கு எண்ணை மட்டும் பயன்படுத்தினால் போதும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தேவையில்லை. இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் வேகமாக நடைபெற வேண்டும். பரிமாற்றம் செய்வதை எளிதாக்குவது, இந்த சேவையை மேலும் பலரும் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின் பேரில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது அதனைப் பயன்படுத்துபவர்கள் இரண்டு முறை வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தவுடன் பணப்பரிமாற்றம் எளிதாக நடைபெறும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கிக் கிளை போன்ற விவரங்கள் தேவைப்படாது.
பெயர், வங்கிக் கிளை போன்றவற்றை சரிபார்த்து பணம் அந்த கணக்கில் சென்றடைய காலதாமதம் ஏற்படுகிறது. இனி இந்த காலதாமதம் ஏற்படாது. இந்தியாவில் ஒரே பெயர் பல்வேறு எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதால், சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனாலும் பெயரைக் குறிப்பிடும் முறை நீக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment