தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்துவந்த விஜய் மீண்டும் "பூவே உனக்காக", "காதலுக்கு மரியாதை" படங்களின் பாணியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு காதல் கதையில் நடிக்கிறார். வழக்கமான பஞ்ச் டயலாக்குகள் இல்லை. அதே நேரத்தில் அசினிடம் விஜய் பேசும் காதல்மொழிகள் நெஞ்சம் தொடுமாம்.
காதல்படம்தான் என்றாலும் சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள். பாங்காங்கில் பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப் பட்டிருக்கிறது. சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் விஜய் நடித்ததைப் பார்த்து அசந்துபோன மார்ஷியஸ் ஆர்ட்ஸ் மாஸ்டர் அவரைப் பாராட்டி கேடயம் ஒன்றை வழங்கி இருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் ஓடும் ரயில் ஒன்றிலும் சில சண்டைக்காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதிலும் டூப் போடாமல் மொத்த யூனிட்டையும் அலற அடித்திருக்கிறார் விஜய்.
புனே'யில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு பாடலையும், மலேசியாவில் நடுக்கடலில் ஒரு பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள்.
ஒரிஜினல் பாடிகாட் படத்தில் நாயகியாக நடித்திருந்தது நயன்தாரா. என்றாலும் ரீமேக்கில் விஜயோடு ஜோடி சேர்ந்திருப்பது அஸின். படத்தின் முக்கியமான மற்றொரு பலம் ராஜ்கிரண். டப்பிங் பேசும்போது அவரே கண்கலங்கிவிட்டார் என்கின்றன தகவல்கள்.
படத்தின் கடைசி இருபது நிமிடங்களும் "காதலுக்கு மரியாதை" படத்தில் இடம்பெற்றதைப்போல உள்ளத்தை உருக்கும்வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
நடிப்பு: விஜய், அஸின், ராஜ்கிரண், வடிவேலு இசை: வித்யாசாகர், இயக்கம்-சித்திக்.
நடிகர் விஜய், இயக்குநர் சித்திக் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம். ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த வடிவேலுவும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம்.
0 comments :
Post a Comment