நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட 300 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஜனவரி இறுதியில் நிறைவடையவுள்ளது. இதனால் பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரு வாரத்துக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படும். மார்ச் மத்தியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபாலா சிறிசேனா கூறினார்.இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற 30 ஆண்டுகாலப் போர் 2009-ல் முடிவுக்கு வந்தது. இதை தமக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக அதிபர் மகிந்த ராஜபட்ச கருதினார். நாட்டில் தமக்கு ஆதரவான சூழல் நிலவுவதை அறிந்த அவர், நாடாளுமன்றத் தேர்தலை முன்னக்கூடியே நடத்த முடிவெடுத்தார். அதன்படி நாடாளுமன்றத்தை முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.ஆனால் இந்தத் தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்ததாகக்கூறி ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய இரு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மகிந்த ராஜபட்ச திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் மூலம் மக்கள் மத்தியில் எனக்கு உள்ள செல்வாக்கு நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.மகிந்த ராஜபட்சவின் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள், நாடாளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. இதை அவர்கள் தேர்தலைப் புறக்கணித்து வெளிப்படுத்தினர். ஈழத்தமிழர் பகுதியில் மிகக் குறைந்தளவே வாக்குப்பதிவானது.இலங்கையில் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ராஜபட்ச கொடுத்த வாக்குறுதிகளை காப்பற்றவில்லை. இன்னும் கணிசமான ஈழத்தமிழர்கள் முகாம்களில் உள்ளனர். ஈழத்தமிழர்கள் தொடர்ந்து துயரையே அனுபவித்து வருகின்றனர். இதனால் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை. இதை ராஜபட்சவும் நன்கறிவார். உள்ளாட்சித் தேர்தலிலும் தமது கட்சிக்கு பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாக்களிக்கமாட்டர்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, தமது கட்சிக்கு இப்போதுள்ள செல்வாக்கை அறிந்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். புலிகளுக்கு எதிரானப் போர் நிறைவடைந்த பின்னர் நடக்கவிருக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. இத்தேர்தல் மூலம் இலங்கையில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு தெரியவரும். இதனால் இத்தேர்தலை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்பதில் இப்போதே முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டன
(இலங்கை ஜனநாயக நாடு என்று சொன்னால் ,சிரிக்கப்போகிறார்கள்அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது.யுத்த நெறிகளை மீறி,அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த பாவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை)
0 comments :
Post a Comment