நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரஞ்சிதா, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது நடை, உடை, பாவனை அனைத்தும் சாமியார் நித்யானந்தாவை போன்றிருந்தது.
சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சில மாதங்களாக எங்கிருந்தார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த டிச, 31ம் தேதி பெங்களூரில் தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்து தன் மீது எந்த தவறும் இல்லை என தன்னிலை விளக்கம் அளித்தார்.
பின்னர் வெளியில் தலை காட்டாமல் இருந்த ரஞ்சிதா, நேற்று பெங்களூரு, காக்ஸ்டவுனில் பாரதிநகர் மக்கள் நல சங்கத்தினரின், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காலை 10.30 வருவார் என, அறிவிக்கபட்டிருந்த நிலையில், காலதாமதமாக, 11.15 மணிக்கு ரஞ்சிதா வந்தார். அவருடன் ஆசிரம பெண் ஒருவர் உடன் வந்தார். இதிலிருந்து அவர், ஆசிரமத்தில் தான் தங்கியிருக்கிறார் என உறுதி செய்யமுடிந்தது. ரஞ்சிதா காரை விட்டு இறங்கியதும், நேராக அங்கிருந்த காக்ஸ்டவுன் கங்கம்மா கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். இலவச சேலை வழங்கிய ரஞ்சிதா மூதாட்டிகளிடம் சிரித்தபடி நலம் விசாரித்தார். மூதாட்டி ஒருவர், ரஞ்சிதாவை, தலையில் இருந்து, கால் வரை தடவிக்கொடுத்து நலம் விசாரித்தார். ஜந்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த ரஞ்சிதா, புறப்பட்டுச் சென்றார்.
அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, மீடியா என்னை மிக அதிகமாக விளம்பரம் செய்துவிட்டது. வேறு சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று சிரித்தபடி கூறியபடி சென்றார். நிருபர்கள் மீண்டும் பேட்டி கேட்ட போது, நான் போனில் பேசுகிறேன் போன் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சாமியார் நித்யானந்தா போன்றே நடிகை ரஞ்சிதா நடந்து கொண்டார்.
0 comments :
Post a Comment