Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 15, 2011

வெஜிடேரியனா? கொஞ்சம் இதை படியுங்கள்!

புதுடில்லி : இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் வெறும் காய்கறிகளை மட்டும் உட்கொள்ளும் சைவ பிரியர்களுக்கு விட்டமின் பி - 12 குறைவால் மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன், முட்டை, இறைச்சி, பால் மற்றும் அதன் துணை பொருட்களில் விட்டமின் பி - 12 சத்து அதிகமாக உள்ளது. விட்டமின் பி - 12 குறைபாடு மூளையின் செயல்பாட்டைப் பாதித்து நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறனை குறைத்து விடும். இது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குர்கானில் உள்ள அர்டீமீஸ் சுகாதார நிறுவனத்தின் நியூராலஜிஸ்ட் பிரவீன் குப்தா கூறுகிறார்.

மேலும் அவர் கூறும் போது "இந்திய மக்களில் பெரும்பாலோர் சைவ உணவு உண்பவர் களாகவும் தினந்தோறும் உட்கொள்ளும் பாலின் கொள்ளளவு குறைந்திருப்பதாலும் அவர்கள் டிமென்டியா நோய்க்கு விரைவிலேயே ஆட்படுவதாக" விளக்கினார். உலக சுகாதார நிறுவனம் 2000ம் ஆண்டிலேயே இந்தியாவில் 35 இலட்சம் அல்ஜீமீர் மற்றும் டிமென்டியா நோயாளிகள் உள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வகையான மூளை கோளாறின் அறிகுறிகளாக அன்றாட நடவடிக்கைகளை மறந்து போதல், தெரிந்தவர்களின் பெயர்களை மறத்தல், அடிக்கடி எரிச்சல்படுதல் மற்றும் மன உளைச்சல் போன்றவைகளைக் குறிப்பிடலாம். சாதாரண ரத்த பரிசோதனையிலேயே இந்நோயை கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் 1 கோடியே 80 இலட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 2025-ல் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!