இந்தியாவில் திருமணத்திற்குத் தயாராகும் இளம் பெண்களின் மனதில் பல ஆயிரக்கணக்கில் இன்பக் கனவுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கனவையாவது இளைஞர்களால் புரிந்துகொள்ளமுடியுமா என்பது மிகவும் சந்தேகமே.
தற்காலத்து நவநாகரீக மங்கைகளின் திருமணக் கனவில் சிக்கும் இந்திய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக நாசமாகிப் போய்விடும் என்பது உறுதி. இளைஞர்களின் வாழ்வையே அழிக்கும்அளவிற்கு இளமங்கையர் போடும் அந்தத் திட்டம்.
இந்தியாவில் பல திருமணங்கள் இப்படி ஒரு “கணக்கோடுதான்” ஆரம்பிக்கிறது. பிறகு அந்தக் “கணக்கை” நிறைவு செய்யப் பயன்படும் ஒரு சூத்திரம்தான் (Formula) அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எனப்படும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act, etc.).
கைதேர்ந்த மருமகள்கள் தாங்களாகவே இந்த ஃபார்முலாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி தங்களது கணக்கை நன்றாக முடித்துக்கொள்கிறார்கள். வேறுசில மருமகள்கள் கணக்கிற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல வழக்கறிஞர்களை நாடினால் அந்த வழக்கறிஞர்கள் இந்தக் “கணக்கிற்கு” ஏற்ற ஃபார்முலாவாக இருக்கும் சட்டப்பிரிவை பரிந்துரை செய்து “கணக்கை” நன்றாக முடித்துத் தருகிறார்கள்.
இந்தியாவில் நடக்கும் திருமணம் மற்றும் அதற்குப் பிறகு வரும் பிரச்சனைகளை சற்று கூர்ந்துநோக்கினால் இந்தக் கணக்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று தெளிவாகப் புரியும். கணவனின் சொத்துக்களை எப்படி தன்வசப்படுத்துவது என்ற திட்டத்துடன் மணமுடிக்கும் பெண்கள் திருமணஉறவை ஒரு வியாபார ஒப்பந்தம் போல செயல்படுத்திக்கொண்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள். அது சரியாக செயல்படாமல் போகும்பட்சத்தில் தங்களது ஆயுதமான “வரதட்சணை தடுப்புச் சட்டங்களை” கையில் எடுப்பார்கள். கணவன் மற்றும் அவனது குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் “வரதட்சணைக் கொடுமை” செய்ததாக புகார் கொடுத்துவிட்டு போலிஸை கொஞ்சம் “கவனித்தால்”போதும் உடனடியாக கணவன் அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்படுவான்.
கணவன் குடும்பத்தோடு சிறையில் அடைபட்டிருக்கும் காலகட்டம்தான் பேரம் பேசுவதற்கான ஏற்ற தருணம். இந்த சமயத்தில் மருமகளின் தரப்பிலிருந்து ஒற்றர்கள் சென்று கணவனிடம் பேரம் பேசுவார்கள். “இந்த” அளவிற்கு பணம் கொடுத்தால் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்வார்கள். இந்தக்கட்டத்தில் பல கணவன்கள் பயந்துகொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். இதற்கு அஞ்சாத கணவன்கள் அடுத்த கட்டத்தில் சிக்கிக்கொள்வார்கள்.
ஒருவழியாக சிறையிலிருந்து ஜாமின் பெற்று வெளியே வந்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு முறை மருமகள் தரப்பிலிருந்து ஒற்றர்கள் தூதுசெல்வார்கள். விவாகரத்து கொடுத்து, வரதட்சணை வழக்கை திரும்பப் பெறுவதற்கு “இந்த” அளவு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்று பேரம் பேசுவார்கள்.
பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறையில் சில நாட்கள் இருந்த அனுபவமும், நீதிக்காக நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நாயாக அலைந்து நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அனுபவமும் எந்த ஒரு வைராக்கியக்காரக் கணவனையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும். இந்த தக்க தருணத்தைப் பயன்படுத்தி மருமகள் தரப்பு தங்களது “கணக்கை” சரியாக முடித்துக்கொண்டு உல்லாசமாக தங்களது “திருமணக் கனவு” நிறைவேறிய முழுத்திருப்தியுடன் தனது அடுத்தக் “கனவினை” நிறைவேற்றிக்கொள்வதற்காக “கணவனால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான அபலை” என்ற பெயருடன் புதிய ஆளைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்.
இதுதான் திருமணம் என்ற பெயரில் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பல திருமணங்களில் நடந்துகொண்டிருக்கும் சட்டத்தின் துணையோடு நடக்கும் விபச்சாரம். அதைப் பற்றி டில்லி உயர்நீதிமன்றம் அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
3 comments :
ஆம் உண்மை மற்றும் இதுபோல் தகவல்களை வெளியிட்டு, புதிதாக திருமண கனவில் இருக்கும் இளைஞர்களுக்கும் தன் மகனுக்கு திருமணம் செய்து பார்க அவலாய் இருக்கும் வயதான தாய்தந்தையர் பெற்றொருக்கும் இதுபோல் சத்தமில்லாமல் சட்டத்தின் உதவியுடன் நடந்தேறிக்கொண்டிருக்ககம் அவலங்களையும் தெரிந்து கொள்வது நல்லது...
மேலும் படிக்க
http://ipc498a-victim.blogspot.com
இதுபோல் தகவல்களை தங்கள் வலைபூவில் வெளியிட்டமைக்கு நன்றி நண்பரே...
வாழ்த்துக்கள்
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?…….. **********
…….
.
Post a Comment