Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 22, 2011

அமெரிக்க விஞ்ஞானிகள் பரபரப்பு!

வேற்றுக் கிரகவாசிகள் (ஏலியன்) பூமிக்கு வந்து மனிதர்களுடன் சண்டையிடுவது போல் ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்ப்பது விரைவில் நிஜமாக வாய்ப்பு உண்டு, என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைதி நடவடிக்கைகள் கமிட்டி சார்பில் "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறை வெறியர்களாக இருப்பர் எனவும், இங்குள்ள இயற்கை வளங்களை சுயநலம் காரணமாக சுரண்டுவர் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் முதல் மதம் வரையில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, பூமியை தாண்டியுள்ள கிரகங்களில் ஏலியன் போன்ற உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி ஏலியன் அல்லது பிற உயிரினங்கள் இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அவ்வாறு ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூமிக்கு வரும் ஏலியன்கள் வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை விண்வெளி அமைதி நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்கா சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரிவினர் சமாளிப்பர் எனவும்; உலக நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் ஜாதி மதபேதம் ஏதும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, இதற்காக சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரிணாமவியல் பேராசிரியர் சைமன் கான்வே மோரிஸ் கூறும்போது, "பூமியை தாண்டியுள்ள இந்த பிரபஞ்சத்தில் "ஏலியன்' என குறிப்பிட்ட யாரும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அது டார்வின் கொள்கை அடிப்படையில் தான் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்க முடியும்.ஹாலிவுட் படங்களில் வருவது போல், விகாரமான தோற்றங்களில் இருக்க வாய்ப்பில்லை. மேலும், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பூமியில் உள்ள வளங்களை ஒருபோதும் சுரண்டவும் வாய்ப்பில்லை. ஏலியன் குறித்த அச்சம் தேவையற்றது' என்றார்.

1 comments :

நல்லாக் கிளப்புறாங்கையா பீதிய........
எல்லாம் சும்மா உதாரு.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!