Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 11, 2011

சர்வதேச பொருளாதாரம்,..ஜி-20 நாடுகள்

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து ஏற்பட்டு வரும் மீட்சி குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஆகிய இருவருபொருளாதாரம் விரிவாக ஆலோசனை நடத்தினர். ஜி8 நாடுகளின் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஜி-20 நாடுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜி-8 நாடுகளின் கூட்டம், ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக, சந்திப்புக்குப்  பிறகு   கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இரு தலைவர்களும் தெரிவித்தனர். உற்பத்தி அதிகரிப்புடன் கூடிய பொருளாதார சீர்திருத்தத்தின் பலன் எந்த அளவுக்கு பயன் அளிக்கிறது என்றும் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டதாகவும், மக்களின் நலன் சார்ந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஜி-8, ஜி-20 கூட்டங்களில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்பட்டது.  2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தாக்கத்திலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி தென்படுகிறது. அப்போது வேலையிழந்தவர்களில் பலர் இன்னமும் வேலை வாய்ப்பின்றி சிரமப்படுகின்றனர். மேலும் பல தொழில்களுக்கு நிதி கிடைப்பதில் இன்னமும்  சிரமம் நிலவுகிறது என்று குறிப்பிட்டனர். சர்வதேச அளவில் இன்னமும் ஏற்றத்தாழ்வு நிலை காணப்படுகிறது. வளர்ச்சிக்கான அறிகுறி இன்னமும் பல நாடுகளில் தென்படவில்லை. எதிர்காலத்தில் ஜி-20 நாடுகளின் செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸி குறிப்பிட்டார். ""நாம் இப்போது 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப புதுப்புது யோசனைகளும்,  சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அதிபர் ஒபாமாவும் இதே கருத்தை கொண்டுள்ளார். இருவரும் இணைந்து புதிய சிந்தனை,  செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளித்து புது உலகம் படைக்க முனைந்துள்ளோம். இந்த உலகில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை,'' என்று சர்கோஸி குறிப்பிட்டார். இரு நாடுகளும் இணைந்து ஜி-8, ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தீர்மானங்களுக்கு ஏற்ப செயல்படுவதென தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவர். ஜி-20 நாடுகளின் தீர்மானத்தின்படி நாடுகளின் கரன்சிகள், பொருள்களின் விலை நிலவரம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் நிலவும் பற்றாக்குறையை தவிர்ப்பது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!