Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 2, 2011

எங்கும் எதிலும் லஞ்சம்!

கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பிறந்த குழந்தைகளை காண்பிக்க, ஊழியர்கள் லஞ்சம் கேட்டு நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் பறிப்பதாக கூறி மருத்துவ அதிகாரியை முற்றுகையிட்ட உறவினர்கள், சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் 150 படுக்கைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு இங்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படுகிறது. தினமும் 25 -30 தாய்மார்களுக்கு பிரசவம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும் இவ்வார்டிலுள்ள தாய்மார்களுக்கும், உறவினர்களுக்கும் உடனடியாக காண்பிக்கப்படுவதில்லை என்றும், பிறந்தது ஆண் குழந்தையாக இருப்பின் 500 ரூபாயும், பெண் குழந்தையாக இருப்பின் 250 ரூபாயும் ஊழியர்களால் லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார் உள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனை நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரசவம் நடந்ததும் என்ன குழந்தை என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் வகையில், ஒலிபெருக்கி வசதிகளும் பிரசவ வார்டில் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். உயரதிகாரிகளால் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் போது மட்டுமே, லஞ்ச முறைகேடுகள் குறைகின்றன. நாளடைவில் கண்காணிப்பு தளர்ந்ததும் மீண்டும் லஞ்சம் தலைதூக்குகிறது. பொதுமக்களின் புகாருக்கு இதுவரை நிரந் தர தீர்வு காண முடியாமல், அரசு மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் சென்றார். அவரிடம், ஊழியர்கள் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் திரண்டு, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக் டர் சிவப்பிரகாசத்தை முற் றுகையிட்டு பிரசவ வார்டு ஊழியர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!