Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 14, 2011

வந்துட்டார்யா வந்துட்டார்யா!

விலைவாசி எல்லா காலங்களிலும் உயர்ந்து வந்துள்ளது. அதற்கேற்ப வருமானம் கூடியிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வருமானம் கூடும்போது விலை உயருவது இயற்கை தான். அதென்னமோ இயற்கை தான்... ஆனா, உங்களுக்கு வருமானம் கூடும்போது, எங்களுக்கு விலைவாசி கூடுதே... அதான் செயற்கையா இருக்கு...!

 கருணாநிதி: பெண் கமாண்டோ படைப் பிரிவை கலைப்பதற்கான எவ்வித ஆணையும் வெளியிடப்படவில்லை. பயிற்சி முடித்த பின் கமாண்டோக்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகள், மாநகர, மாவட்ட சேம நலப்படைகளில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். பத்திரிகைகளில் இது சம்பந்தமாக வெளிவந்த செய்திகள், உண்மைக்கு மாறானவை.

 கமாண்டோ படைன்னா, தனி அணியா இருக்கணும்... பயிற்சி மட்டும் முடிச்சுட்டு, பழைய அணிக்கே போயிடறதுன்னா அதுக்குப் பேரு, படையாக முடியாது... இப்போ இருக்கறது, பெண் கமாண்டோ படையா, கமாண்டோ பயிற்சியா...?

எம்.எல்.ஏ.,க்களின் பதவிக்காலமும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலமும் விரைவில் முடியவுள்ளன. தவிர, பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் பலரும், தங்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, மேல் சபைக்கான தேர்தலை அவசர கோலத்தில் நடத்தாமல், தள்ளி வைக்க வேண்டும்.

ஏன் இப்படி ஒரு கோரிக்கை வச்சிருக்கீங்க...? "கூட்டணி இன்னும் உறுதியாகலை... சட்டசபை தேர்தலுக்கப்புறம், ஆட்சியைப் பிடிக்காட்டாலும், அதிக சீட்டுகளையாவது ஜெயிச்சிடுவோம்... அப்புறம் மேலவைத் தேர்தல் நடத்திக்கலாம்'னு நேரடியா கேட்க முடியாதுங்கறதாலயா...?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!