துபாய் : உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைக்கப்பட்ட உணவு விடுதியின் திறப்பு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. இதன் மூலம் உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள உணவு விடுதி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில், உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அமைந்துள்ளது. இது மொத்தம் 828 மீ., உயரம் கொண்டது.
இதில், 442 வது மீ., உயரத்தில் 122 வது மாடியில் நேற்று புதிய உணவு விடுதி ஒன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவுவிடுதி இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள சி.என்.டவர் கட்டடத்தில் அமைந்துள்ள 360 உணவு விடுதிதான் இதுவரை உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த உணவு விடுதி என்ற இடத்தைப் பெற்றிருந்தது.
புர்ஜ் கலிபாவின் உயரமான புதிய உணவு விடுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான பதிவு அனைத்தும் முடிந்து விட்டன. இந்த விடுதியில் இருந்து துபாயின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுதியில் தனியாக அமர்ந்து சாப்பிட பதிவு செய்வதற்கு எட்டாயிரம் ரூபாயும், டீ சாப்பிடுவதற்கு 4,500 ரூபாயும், முற்றத்தில் அமர்ந்தபடி மதுபானம் மற்றும் நொறுவைகள் சாப்பிட இரண்டாயிரத்து 500 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.
0 comments :
Post a Comment