லண்டன் : ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் திருநங்கைகளாக மாறுபவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பிறந்து ஒரு மாதமேயான ஆண் குழந்தை, பெண் குழந்தையாக மாறிய விசித்திரத்தைக் கேட்டதுண்டா? தென் ஆப்ரிக்காவில் தான் இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள், கென்னத்-மாடெலிஷியா தம்பதியர். இவர்களுக்கு கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த போதே, அது ஆண் குழந்தை தான் என்று டாக்டர்களும் உறுதிப் படுத்தியிருந்தனர். அக்குழந்தைக்கு கென்னி ஹிஸ்ஹாக் என்று கென்னத் தம்பதியர் பெயரிட்டனர்.
பிறந்து நான்கு வாரங்களான நிலையில், கென்னியின் பிறப்புறுப்பில் மாற்றங்கள் காணப்பட்டன. இதனால் கவலையடைந்த பெற்றோர், கென்னியை டாக்டரிடம் காண்பித்தனர். கென்னியைப் பரிசோதித்த டாக்டர், கென்னி பெண் குழந்தையாக மாறி வருவதாகத் தெரிவித்தார். கென்னியின் உடலில் நொதியின் பற்றாக்குறையால், ஹார்மோன்கள் வழக்கத்துக்கு மாறாக சுரக்க ஆரம்பித்ததே இதற்கு காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் கென்னிக்கு இது தொடர்பாக ஓர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கென்னியின் பெயரை மெக்கென்சி என்று பெற்றோர் மாற்றியுள்ளனர்.
1 comments :
ஹ..ஹ..ஹ.. எப்படியெல்லாம் நடக்குது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
Post a Comment