புது தில்லி, ஜன. : சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரபல இசை அமைப்பாளரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது.
கலை, இசைத் துறையில் இவரது அரிய பங்களிப்பை கெüரவித்து இந்த விருது வழங்கப்படுகிறது.
வரும் 26ம் தேதி டாவோஸில் தொடங்கும் இந்த மாநாடு 5 நாள்கள் நடைபெறும். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா முதலியோர் இதில் பங்கேற்கின்றனர், ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பில் இடம்பெற்றுள்ள சிஐஐ (இந்திய தொழிலகக் கூட்டமைப்பு) சார்பில் 139 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
11 நாடுகளின் தொழிலதிபர்கள், அதிபர்கள், பிரதமர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், ஆன்மிகத் தலைவர்கள் என சுமார் 2500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment