Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 19, 2011

தமிழகத்திற்கு பெருமை! இந்தியாவிலேயே இரண்டாவது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது, என காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன மூன்றாவது காகித உற்பத்தி இயந்திரத்தை, காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: முதல் இரண்டு இயந்திரம் மூலம், இந்த ஆலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்தது. அதை தொடர்ந்து, இரண்டு காகித உற்பத்தி இயந்திரங்களையும் நவீனமாக்க, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டு, அந்த இரண்டு இயந்திரங்கள் மூலம் இந்த ஆலையின் காகித உற்பத்தித் திறன், ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது இந்த ஆட்சியில், செய்தித்தாள் காகித நிறுவனம் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு 573 மெட்ரிக் டன் வீதமும், ஆண்டுக்கு மேலும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மெட்ரிக் டன் காகிதத்தை உற்பத்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது அதிநவீன காகித இயந்திரம் இந்த ஆலையில் நிறுவப்பட்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் காகித உற்பத்தித் திறன் மொத்தம் நான்கு லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த இயந்திரம் குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடனும், குறைந்த மின்சாரத்தையும் கொண்டும் செயல்படக் கூடியது.

இந்த இயந்திரத்தை துவக்கி வைப்பதுடன், 67 கோடி ரூபாய் மதிப்பில், நாள் ஒன்றுக்கு 600 டன் உற்பத்தி திறன் கொண்ட, திடக்கழிவில் இருந்து சிமென்ட் தயாரிக்கும் ஆலை, 135 கோடி ரூபாய் மதிப்பில் நீராவி மற்றும் மின் உற்பத்தி பிரிவை நவீனப்படுத்தும் திட்டம், 175 கோடி ரூபாய் மதிப்பில் 300 டன் உற்பத்தித் திறன் கொண்ட, காகிதத்தில் இருந்து மை நீக்கிய காகிதக் கூழ் தயாரிக்கும் ஆலை என, 377 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று புதிய திட்டப் பணிகளுக்கும் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காகித ஆலை அமைந்துள்ள பகுதியை இணைக்கும் கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில், 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!