லண்டன் : எந்த வயதில் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்பது குறித்து, பிரிட்டனில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 50 வயதைக் கடந்த 1,500 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பெரும்பாலானோர், 50 வயதைக் கடந்த பின்னரே சந்தோஷத்தை உணருவதாக தெரிவித்தனர். கல்வியை முடித்ததும், தொழில் தொடங்குவது, வேலையில் சேருவது என்று ஆண்களும், பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர். இடையில் திருமணம், குழந்தைகள், பின், குழந்தைகளின் கல்வி, வேலை என்று அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடவோ, சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.
தங்களது பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கும் போதும், தங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை உணரத் தொடங்குவதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதன் பின்னரே, தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முடிவதாகவும், தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட முடிவதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற பத்தில் நான்கு பேர், தாங்கள் எல்லா வயதிலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் லட்சியத்தை அடைந்த பின்னரே, வாழ்க்கையில் சந்தோஷம் தொடங்கியதாக கூறுகின்றனர்.
ஐம்பது வயதைக் கடந்த பின்னரே, தங்களது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment