உலகின் மிகவும் குள்ளமான பெண் என சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அந்த பெண்ணின் பெயர் ஹாட்சிஸ் ஹோகாமன். இவர், துருக்கி நாட்டில் கதிரிலி என்ற நகரில் வசிக்கிறார்.
இவர் உயரம் வெறும் 28 அங்குலம் தான்.ஏதோ ஒரு குறைபாடு காரணமாக இந்த பெண்ணின் உயரம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. இவர் அம்மா உட்பட, இவர் வீட்டில் எல்லாருமே வழக்கமான உயரம் கொண்டவர்கள் தான். ஹாட்சிஸ் மட்டுமே வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கிறார்.
இது குறித்து ஹாட்சிஸ் கூறியதாவது, நான் பள்ளியில் படிக்கும் போதே உயரம் குறைவாகத்தான் இருந்தேன்.என் தோழிகள்எல்லாருமே என் உயரத்தை கிண்டல் செய்வர். அப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும்.ஆனால் இப்போது என் உயரம் காரணமாக நான் புகழ் பெற்று விட்டேன். இந்த பெருமையால், நான் மிகவும் உயர்ந்தவளாக கருதுகிறேன். நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என கடவுள் முடிவு செய்து விட்டார். என்னை நேசிப்பவரை நான் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன் என நம்புகிறேன் என்றார். ஹாட்சிசின் வயது இப்போது 21. உலகின் மிகவும் குள்ளமான மனிதர், நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திர தாபா. அவர் உயரம் 25.8 அங்குலம். தாபாவை விட இந்த பெண் உயரம் சிறிது அதிகம். ஹாட்சிஸ் குறித்து அவர் தாய் ஹாதுன் கூறியதாவது... நான் கர்ப்பமாக இருந்த போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பிரசவமும் இயற்கையாகத்தான் இருந்தது.
எல்லா குழந்தை களையும் போலத்தான் பிறந்த போது, என் குழந்தையின் எடையும் இருந்தது. ஒரு வயது ஆன போதுதான் அவள் உயரமாகவில்லை என்பது தெரிந்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த டாக்டர்கள், "ஏன் அவள் உயரம் அதிகரிக்க வில்லை என தெரியவில்லை...' என்றனர். அவளுக்கு நான்கு வயது ஆன போது அவள் வளர்ச்சி நின்றது என்றார். இவர் கணவர் பெயர் இப்ராகிம். இந்த தம்பதிக்கு இன்னொரு மகன் உண்டு. அவர் மற்றவர்களைப் போலவே வழக்கமான உயரத்துடன் இருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்களால், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இப்போது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற உள்ளது.
0 comments :
Post a Comment