மலேஷியாவில் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய பெண் தொழிலதிபருக்கு 120 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்து ஜின்கூவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மலேஷியாவில் முன்னணி நிதி நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வந்த 49 வயதுடைய ஒரு பெண் . இவரின் பெயர் தெரிவி்ல்லை.இவர் தனியாக நிதிநிறுவனம் மற்றும் பணிபரிமாற்ற மையம் ஓன்றினையும் நிர்வகித்து வந்தார். இதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதலீடு செய்திருந்தனர். 100 மில்லியன் டாலர் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென நிறுவனம் மூடப்பட்டதாகவும், முதலீட்டாளர்களை ஏமாறறிவிட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து கோலாலம்பூர் கோர்ட்டில்வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணையில் இவருக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.63 மில்லியன் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment