ஏ.ஆர்.ரஹ்மானின் மூலம் இசை நற்பணிகள் பலவும் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டேஷன் சார்பில் 2011ம் ஆண்டிற்கான அபிஷியல் காலண்டர் போடப்பட்டு, ஏ.ஆர்.ஆரின் சுற்றம் மற்றும் நட்பிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மாத காலண்டரான அதில் ஜனவரி மாதம் ஏ.ஆர்.ரஹ்மானின் புகைப்படத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி 2011-க்கு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் புகைப்படம், மார்ச் மாதத்தில் ட்ரம்ஸ் சிவமணியின் புகைப்படம், ஏப்ரலில் சுஜாதா மோகன், மே மாதத்தில் ஸ்ரீனிவாஸ், ஜூனில் சின்மயி, ஜுலையில் கார்த்திக், ஆகஸ்ட்டில் தன்வீஷா, செப்ரம்பரில் பென்னி தயாள், அக்டோபரில் சுஸன் டிகோல், நவம்பரில் பிளாசே, டிசம்பரில் மீண்டும் ஏ.ஆர்.ரஷ்மான் என 12 மாதங்களுக்கும் 12 சினிமா இசை பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அதுவும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தொடர்ந்து பணிபுரியும் இசையாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்களையே இடம் பெற செய்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தாரகமந்திரமான எல்லா புகழும் இறைவனுக்கே எனும் வாசகத்தை அவரது படத்துடன் முதல் பக்கத்தில் அச்சேற்றி வோர்ல்டு லைட் எனும் நிறுவனம் ஏ.ஆர்.ரஹ்மானின் பவுண்டேஷன் சார்பில் வெளியிட்டிருக்கும் இந்த 2011ம் ஆண்டு ஆபிஸ் காலண்டரில் இடம் பெற்றிருக்கும் இசைபிரபலங்களின் புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்திருப்பவர் செல்வகுமார் எனும் பிரபல புகைப்படக் கலைஞர் இவர், ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான போட்டோ கிராபரும் கூட!
0 comments :
Post a Comment