Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 3, 2011

பல பரிணாமத்துடன் நடித்த கமல்! புது கெட்டப்பில் !!

மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

மலையாளத்தில் கடந்த ஆண்டு மம்முட்டியை வைத்து பழசிராஜா என்ற வரலாற்று ஹிட் படத்தை எடுத்தவர் கோகுலம் கோபாலன். இவர் அடுத்து மெகா பட்ஜெட்டில், திப்புவும் உன்னியார்ச்சாயும் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தபடமும் வரலாற்று சம்பந்தப்பட்ட படம்தான். மன்னர் திப்புசுல்தானின் வாழ்க்கையை மையமாக மைத்து இப்படம் உருவாக இருக்கிறது.

இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜான்பால் எழுதியுள்ளார். வயலார் மாதவன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்குகிறது. இதற்காக கமலிடம் நான்கு மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

இது குறித்து ஜான்பால் கூறும்போது, கதையை எழுதும்போதே திப்பு சுல்தான் கேரக்டருக்கு கமல்தான் பொருத்தமானவர் என உணர்ந்தோம். அவர் தோற்றம் கம்பீரமாக இருக்கும். வேறு யாரும் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது. கமலுடன் நடிக்கும் இதர கேரக்டர்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. யுத்தம், சுதந்திரப் போராட்டம், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் இருக்கும் என்றார்.

1 comments :

திப்புவின் கேரக்டருக்கு கமல் பொருந்துவாரா என்பதை விட இந்த சினிமாக்காரர்களிடம் அதுவும் இந்த கோபாலன் போன்றோர்களிடம் திப்பு மாட்டிக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.என்ன பெரிதாக சொல்லபோகிறார்கள் கமலை வைத்து திப்பு முத்தமிட்டது உதட்டிலா அல்லது கன்னத்திலா என்று பேசி திப்புவின் நிஜ வரலாற்றை குதறப்போகிறார்கள்.தற்போது வியாபாரத்துக்கு திப்பு தேவைப்படுகிறார் போலும். வாழ்க சினிமாவியாபாரம்....!

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!