லண்டன், செப். 28 : வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து பணியாற்றுபவர்கள் அந்நாட்டு சட்டவிதிகளுக்கேற்ப சில நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
இந்நிலையில் உரிய அனுமதியின்றி வெளிநாட்டவர் பலர் லண்டன் கம்பெனிகளில் வேலை செய்துவருகின்றனர் என்று புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து லண்டன் குடியுரிமை அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது லண்டன் மேற்கு பகுதியில் உள்ள ஆசியன் சூப்பர் மார்க்கெட்டில் உரிய அனுமதியின்றி பணியாற்றிய 25 பேர் பிடிபட்டனர். இதில் 23 பேர் இந்தியர்கள். இதே போன்று லண்டன், மான்செஸ்டர் பகுதியில் கட்டுமானப் பணியாற்றிய 4 இந்தியர்கள் பிடிபட்டனர். அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.
அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு ஊழியர் ஒருவருக்கு தலா ரூ. 7.5 லட்சம் என்ற வீதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment