கொல்கத்தா : பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இதுகுறித்து “யூனிசெப்” நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில் இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.
அந்த மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும். கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என “யூனிசெப்” நிறுவனத்தின் மேற்கு வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார். இத்தகைய திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம் விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.
இதனால் வறுமையும், நோய் கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் சமூக நல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
0 comments :
Post a Comment