Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 29, 2011

விழிப்புணர்வு பிரச்சாரத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதா ?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான சட்டங்களும், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அது குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றும், பெண்களுக்காக பாடுபடும் தனியார் தொண்டு அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல வகை. கற்பழிப்பு, கடத்தல், பலாத்காரம், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுதல், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட இனங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. பெண்களுக்கான குற்றங்களை குறைக்க, அரசு தரப்பில், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மற்றொருபுறம், பெண்களுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2007ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஓரளவிற்கு குறைந்துள்ளன. நடப்பாண்டில், இதுவரை 4,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்தாண்டு பெண்களுக்கான குற்றங்கள் மேலும், குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, "தமிழகத்தை பொறுத்த வரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, அதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சட்டப்பூர்வமான அணுகுமுறை, உடனடி தீர்ப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றன' என்றார்.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், குற்றங்கள் குறைகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பெயரிட விரும்பாத, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

1 comments :

பெண்வீட்டுச் சொத்தோட பெண்வீட்டு உறவுகளையும் அழிக்க நெனைக்கிற பொறுக்கிங்க எண்ணிக்கை பெருகிக்கிட்டுதான் இருக்கு. இதுல எங்கிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறை கொறையுறது?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!