Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, September 9, 2011

உதவியாளருக்கு 34 நிறுவனங்கள், ராம் தேவ்க்கு ?

புதுடெல்லி, செப். 9 : யோகா குரு ராம்தேவ் பெயரில் எந்த நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவரது உதவியாளரை இயக்குனராக கொண்டு 34 நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி பாராளுமன்றத்தில் கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது.

யோகா குரு ராம்தேவ் பெயரில் நிறுவனங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவரது நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணன் பெயரில் 34 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஆச்சார்ய பாலகிருஷ்ணன் தான் தலைவராக உள்ளார். இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.265 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது., இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*சிரியவைகளை ஊதி பெரிதாக்கும் பார்ப்பன ஊடகங்கள் இதை கண்டு கொள்வது இல்லை. ஏன் ?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!