நமது உடலுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதத்தின் அளவு 0.8 கிராம்கள். இது ஆரோக்கியமான அமெரிக்கர்களை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு.
வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகளுக்கு என்றால், இந்த அளவை விட கூடுதலாக புரதம் தேவைப்படும்.
உடலின் ஒரு கிலோகிராம் எடைக்கு 2 கிராம் என்னும் அளவை விட புரதத்தின் அளவு அதிகரித்தால், அதைச் சுத்திகரிக்க சிறுநீரகங்கள் அதிகம் சிரமப்பட நேரிடும். உடலில் அதிகமாக உள்ள புரதம் ரியாவாக மாறி, சிறுநீருடன் வெளியேறும்போது உடலில் உள்ள கால்சியமும் சேர்ந்து வெளியேறி விடுகிறது.
இது எலும்புகளுக்குக் கெடுதல்களை உண்டாக்கி, காலப்போக்கில் `ஆஸ்டிரியோ போறோசிஸ்' என்ற நோயையும் உண்டாக்கி விடுகிறது. அளவுக்கு மீறினால், புரதமும் நஞ்சுதான்.
0 comments :
Post a Comment