Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 8, 2011

டெல்லி குண்டு வெடிப்பு! வழக்கம்போல் பொறுப்பேற்கும் இ மெயில் !?

டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புளளதாக பல்வேறு ஊடகங்களுக்கு இமெயில் வந்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து harkatuljihadi2011@gmail.com என்ற முகவரியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.

(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இதனை திசைதிருப்பும் முயற்சியாக கூட நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த மெயிலை என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், முழுமையாக விசாரித்த பின்னரே இது தீவிரவாத ஆர் எஸ் எஸ் சின் கைவருசையா அல்லது ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.

*இதுநாள்வரை நடந்த குண்டு வெடிப்புகளை ஆர் எஸ் எஸ் நடத்தி விட்டு சிறுப்பான்மையர் குறிப்பாக முஸ்லிம்கள் மேல் பலியை போட்டது, இந்த முறையாவது சரியான விசாரணையை மேற்கொள்ளுமா அல்லது ஹிந்துத்துவா பின் செல்லுமா? இந்திய அரசு.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!