சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. காயம் காரணமாக சச்சின், யுவராஜ் சிங் இம்முறையும் அணியில் இடம்பெற மாட்டார்கள்.
ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி வரும் அக்., 14ல் ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு, இன்று சென்னையில் நடக்கிறது.
இங்கிலாந்து தொடரில் சச்சின், ஜாகிர்கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். இதனால் இன்று வலிமையான இந்திய அணியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுவது உறுதி. ஏனெனில் சச்சின், யுவராஜ் சிங் இருவரும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.
இதனால் தான் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சச்சின் பங்கேற்கவில்லை. இவர் முதல் இரு போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. பின்தலையில் அடிபட்ட காம்பிர், கோல்கட்டா அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். இதனால் இவரை தேர்வுசெய்வதில் எந்த சிக்கலும் இருக்காது., ஆனால், பவுலர்களை தேர்வு செய்வது பெரும் தொல்லையாக இருப்பது உறுதி. ஏனெனில், முன்னணி வீரர்கள் ஜாகிர் கான், முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தில் இருந்து மீளவில்லை.
சேவக் சந்தேகம் : காதுகேளாமை மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட சேவக் உடற்தகுதி குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கவில்லை. வயிற்று பிடிப்பால் அவதிப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தற்போது மும்பை அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் அசத்துகிறார். இதனால், ஹர்பஜன் அணிக்கு திரும்புவது உறுதி.
0 comments :
Post a Comment