புதுடெல்லி : மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு பெறும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர்.
263 கோடி ரூபாய் சொத்துள்ள கமல்நாத் தான் அமைச்சர்களில் அதிக சொத்துள்ளவர். வெறும் 32 லட்சம் ரூபாய் சொத்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தான் அமைச்சர்களில் ஏழை!
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பெயரில் 22 லட்சம் ரூபாய் சொத்துள்ளது. ஆனால் அவரின் மனைவியின் பெயரில் 12 லட்சம் ரூபாய் சொத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 5 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதில் 1.8 கோடி அசையா சொத்தாகவும், 3.2 கோடி வங்கி வைப்புத் தொகையாகவும் உள்ளது. சண்டிகரிலுள்ள 90 லட்சம் மதிப்புள்ள வீடும், புதுதில்லியில் வசந்த்கஞ்சிலுள்ள 88 லட்சம் மதிப்புள்ள அபார்ட்மெண்டும் அசையா சொத்துகளில் அடங்கும்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு 1.8 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இதில் 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓர் அசையா சொத்தும், இன்னும் சில சொத்துகளும், வங்கி வைப்புத் தொகையும் அடங்கும்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 11 கோடி மதிப்புள்ள சொத்தும், அவருடைய மனைவி நளினி சிம்பரத்தின் பெயரில் 12.8 கோடி மதிப்புள்ள சொத்தும் உண்டு.
விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு வங்கி வைப்புத் தொகையும், பல்வேறு கம்பெனிகளில் போடப்பட்டுள்ள முதலீட்டுப் பங்குகளுமாகச் சேர்த்து 12 கோடி சொத்து உண்டு.
பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவுக்கும், அவருடைய மனைவிக்குமாகச் சேர்த்து 15.2 கேடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.
முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு 2.94 கோடி மதிப்புள்ள சொத்து உண்டு. அவருக்கும், அவருடைய மனைவிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பங்குகள் உண்டு.
0 comments :
Post a Comment