Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, September 12, 2011

எந்த ஆட்சி வந்தாலும் முதலிடத்தில் தமிழகம் எதில்..?

இந்தியாவில் தமிழகம், முதன்மை இடத்தை நோக்கி பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. அதே போல், குற்றச் சம்பவங்களிலும் ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது.

குறிப்பாக, சொத்துக்களை மையமாக கொண்டு நடக்கும், ஆதாயக் கொலை, திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2010ம் ஆண்டில் கொலை, ஆதாயக் கொலை மற்றும் சொத்து தொடர்பான வழக்குகளையும் சேர்த்து 23 ஆயிரத்து 68 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டான 2009ல், 22 ஆயிரத்து 941 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தாண்டில், கடந்த ஜூன் வரை, 10 ஆயிரத்து 889 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், சொத்து தொடர்பான வழக்குகள் மட்டும் 9,984. தற்போது நில மோசடி வழக்குகள் அதிகளவில் பதியப்படுவதால் இந்த எண்ணிக்கை, இம்மாதத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டி பறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவற்றைத் தவிர, பெண்களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2010ம் ஆண்டில் மிக முக்கிய குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை, 1,715 கொலை, 153 ஆதாயக் கொலை, 1,817 வழிப்பறி, 4,715 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் முந்தைய ஆண்டை விட அதிகம். இந்தாண்டும், கடந்த ஆறு மாதத்தில் 905 கொலை, 54 ஆதாயக் கொலை, 1,104 வழிப்பறி, 2,301 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது, தி.மு.க., - அ.தி.மு.க., என்றில்லை; எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை தொடர்கிறது.

ஆண்டுதோறும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது., ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு, அதிகாரிகளும் மாற்றப்பட்டாலும், குற்றங்கள் குறைந்ததாகவே தெரியவில்லை. தமிழகம் முழுவதும் இந்தாண்டில், ஜூன் வரையில் பதிவான 10 ஆயிரத்து 889 குற்றச் சம்பவங்களில், 6,554 சம்பவங்கள் அதாவது, 60 சதவீதம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் ஆறு மாதங்களில் நடந்த 905 கொலை வழக்குகளில், 838 சம்பவங்கள் புலனாய்வு செய்யப்பட்டுள்ளன. வழிப்பறி சம்பவங்கள் 1,104ல், 558ம், கொள்ளை சம்பவங்கள் 2,301ல், 926 சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். போலீசாரின் தேடுதல் படலம் நடந்து கொண்டிருக்கும் போதே,"ருசி கண்ட பூனை சும்மா இருக்காது' என்பது போல, இன்னும் பல்வேறு சம்பவங்களில் அந்த நபர் ஈடுபட்டிருக்கலாம். ஆக, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வது தொடர்கதையாகிறது.

3 comments :

புள்ளி விவரங்கள் நடுங்க வைக்கிறது

yar atchiku vanthalum avanga avanga pocket correct fill aguthu

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!