ஐதராபாத், செப்.25 : ரயில் நிறுத்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் தனி மாநிலம் குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு அறிவிக்காவிட்டால் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினமா செய்யப்போவதாக தெலுங்கானா பிராந்தியத்தை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா போராட்டத்தை ஒட்டி தெலுங்கானா பிராந்தியத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே அரசு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் உள்ளிட்ட இந்த 10 மாவட்டங்களிலும் 10,000 பேருந்துகள் ஓடவில்லை., இரண்டு நாள் ரயில் நிறுத்த போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பிராந்தியத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன., மேலும் இந்த வழியாக ஓடும் ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன., ரயில் நிறுத்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்து 3 லட்சம் ஆட்டோ ரிக்ஷாக்களும் ஓடவில்லை.
ஐதராபாத்தில் மட்டும் 60,000 ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தெலுங்கானா கூட்டு குழுவை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் ரயில் பாதைகளில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாரதீய ஜனதா கட்சி, எம்.எல். கம்யூனிஸ்டு கட்சி, போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ரயில் பாதைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.
வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேண்டிய மக்கள் எந்த வாகன போக்குவரத்தும் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். மொத்தத்தில் நேற்று தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது. இந்த போராட்டத்தை முன்னிட்டு தெலுங்கானா பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment