50ஆண்டுகளுக்கும் மேலாக இசைதுறையாற்றி வரும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
1958ம் ஆண்டு "நல்ல இடத்து சம்மந்தம்" என்ற படத்தில் "இவரே தான் அவர்... அவரே தான் இவர்..." என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 1961ம் ஆண்டு வெளிவந்த "பாசமலர்" படத்தில் "வாராயோ தோழி வாராயோ..." என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதுதவிர சினிமா அல்லாத பக்தி பாடல்கள் "தாயே கருமாரி..", "செல்லாத்தா செல்ல மாரியத்தா..." உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர். விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மாநில விருதுகள், இதுதவிர வெளிநாடுகளில் வாங்கிய பல விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக இசைபணியாற்றி வரும் எல்.ஆர்.ஈஸ்வரியை பாராட்டி, ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் மற்றும் சாதக பறவைகள் குழு சேர்ந்து அவருக்கு, "பாட்டு ராணிக்கு பாட்டு திருவிழா" என்று ஒரு விழாவை எடுத்து நடத்த போகிறார்கள். இந்த விழா வருகிற 25ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்தவிழாவிற்கு பிரபல சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
1 comments :
Nice Singer need tone present by sasi
Post a Comment