Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, September 20, 2011

அன்றும் இன்றும் என்றும் நடிகவேல்! பி.வாசு !!

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் 32ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செப்டம்பர் 17ம் ‌தேதி, சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக வளாகத்தில் நடிகர் எம்.ஆர்.ராதா பற்றிய கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து இயக்கி தயாரித்திருந்த, "என் பார்வையில் நடிகவேள்" எனும் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. முனைவர் அகிலா சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், குறுந்தகட்டின் முதல் பிரதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு வெளியிட, இயக்குநர் பி.வாசு பெற்றுக் கொண்டார்.

திரையுலக பிரபலங்கள் முக்தா சீனிவாசன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் சார்லி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய இவ்விழாவில், இயக்குநர் பி.வாசு பேசுகையில், இந்த ஜென்ரேஷன் இளைஞர்களையும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா கவர்ந்திருப்பதற்கு சான்று தான் இங்கு குழுமியிருக்கும் இளைஞர்கள் கூட்டம். அவர்கள் இக்குறும்படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தங்களது நண்பருக்காக வந்திருந்தாலும் சரி, எம்.ஆர்.ராதாவிற்காக வந்திருந்தாலும் சரி, நான் எல்லாம் எம்.ஆர்.ராதாவின் தீவிர ரசிகனாக, அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன். அந்த காலங்களில் சில படங்கள் நாயகர்களுக்காக ஓடும். சில படங்கள் பேனருக்காக ஓடும், சில படங்களோ அப்பட நாயகர்களுக்காக ஓடும். ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் அவரது நடிப்பிற்காக மட்டுமே ஓடிய படம். அவர் தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ரத்தக்கண்ணீர் படம் தான் என்றால் மிகையல்ல.

நான் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படம் இயக்க செய்கிறேன். அங்கெல்லாம் எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்கு ஈக்குவலாக தெரிந்த போன தலைமுறை தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதா அண்ணன் மட்டுமே. கன்னடத்தில் என்னை ரத்தக்கண்ணீர் படத்தின் செகண்டு பார்ட்டை இயக்கித்தரச் சொன்னார்கள். அவர்களிடம் நான் ஒரு வருடம் டைம் கேட்டிருக்கிறேன். காரணம் அவரது நடிப்பு, அதன் மீதான பயம் தான்.

நடிகர் திலகம் சிவாஜியே ஒருமுறை என்னிடம், டேய் நான் ஷூட்டிங்போனா அந்தப்படத்துல, ஸ்பாட்டுல ரங்காராவ், ராதா அண்ணன் இரண்டுபேரும் இருந்தா உஷாரா இருப்பேன். காரணம் கொஞ்சம் ஏமாந்தா அவங்க இரண்டு பேருமே நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள்... என்பார். அப்படிப்பட்ட மாபெரும் நடிகர் எம்.ஆர்.ராதா என்ற பி.வாசு, என் பார்வையில் நடிகவேள் குறும்படத்தை இயக்கி, தயாரித்த எஸ்.மதன், ஆர்.தினேஷ் இருவரையும் பாராட்டினார்., முன்னதாக இந்நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஆர்.தினேஷின் தந்தை எம்.ரமேஷ் பாபு ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரையாற்றினார்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!