Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, September 7, 2011

நிகழ்ச்சிகளில் தமிழ் பாடலை பாடி அசத்தும் அமெரிக்கர்கள் !!

தமிழ்நாட்டில் பிறந்த பலரும் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வம் காட்டி வரும் இக்காலகட்டத்தில், தமிழ் சினிமா பாடலை உற்சாகமாக தமிழில் பாடி மகிழ்ந்து வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

குளிர் சூழ்ந்த வட அமெரிக்காவின் வட பகுதியான மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஓக்லாண்ட் பல்கலைக்கழக மாணவர்கள்தான் தமிழ் பாடலை தங்குதடையின்றி பாடி தமிழுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பட்டங்களை வழங்கி வரும் இந்த பல்கலைக்கழத்தில் இசை, திரையரங்கு, டான்ஸ் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு துறை இயங்கி வருகிறது. இசையிலும், சினிமா மற்றும் நடனத்திலும் ஆர்வம்மிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த துறையை சேர்ந்த ஓக்லாண்ட் சோரல் குழு தான், நம் தமிழ் சினிமா பாடல் ஒன்றை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி அசத்தி வருகிறது.

ஏ.வி.எம்., தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற, "சிவாஜி" படத்தில் இடம்பெற்ற "பல்லேலக்கா... பல்லேலக்கா..." என்ற ஹிட் பாடல்தான் அது. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டிருந்த இசை, அப்போதே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்தது.

படம் ரிலீஸ் ஆன நாட்களில் தமிழகத்திலும், உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் ஒலிந்த அந்த பாடலை, தற்போதும் தமிழகத்தில் பாட்டுக் கச்சேரிகளில் கேட்கலாம். இந்த பல்லேலக்கா இசை தமிழர்களை கவர்ந்தது போலவே, ஓக்லாண்ட் சோரல் குழுவையும் கவர்ந்து விட்டதுபோலும். அமெரிக்க மாணவர்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் உருவான அந்த பல்லேலக்கா பாடல் சமீப காலமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளது. நம்மூர் மேடை கச்சேரிகளில் பாடுவதைப்போலவே கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள், இசைக்கருவிகளை இசைத்தபடியும், இசைக்கேற்ற நடனம் ஆடியபடியும் பாடும் பாடல் அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த குழு ஒருமுறை மட்டும் இதுபோன்ற பாடல்களை பாடுவதில்லையாம்; பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற பிரபலமான பாடல்களை, விதவிதமான மொழிகளில் பாடி பாராட்டினைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெரியாத, தமிழைப் படிக்காத அந்த மாணவர்கள் வெறும் மொழி உச்சரிப்பை மட்டும் புரிந்து கொண்டு அழகாக பாடுவதை கேட்கும்போது தமிழுக்கு பெருமை கிடைத்திருப்பதை உணர முடிகிறது அல்லவா? நாமெல்லாம் ஆங்கிலத்துக்கு மாறும்போது அமெரிக்கர்கள் தமிழ் பாடல் மூலம் பேருமை சேர்க்கிறார்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!