Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 29, 2011

உலக இதய நாள் ! 60 சதவிகிதம் இந்தியர்கள் !!

துபாய் : இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.

19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.

இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது, அதிகமான மக்கள் இருதய சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

மக்களிடையே மாரடைப்பு நோய்களை பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும் என்றும், தினம்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து ஆரோக்கியமாக இருந்தால் மாரடைப்பு நோய்களை தவிர்க்கலாம் என்றும் உலக சுகாதார துறை அறிவித்துள்ளது.

@ உலக இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது. @

அமெரிக்க ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும் சீனர்களைவிட 10 மடங்கும் ஜப்பானியர்களைவிட 20 மடங்கும் இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.

25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை மாரடைப்பு தாக்குவது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்கின்றனர்., இன்றைக்கு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணம் லைஃப் ஸ்டைல் மாறுதல் மற்றும் நம் ஃபாஸ்ட் புட் உணவு பழக்கம்தான்..!

இந்த இதய தினத்தில் நம் இதயத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, முக்கியமாக இன்னொன்றையும் எடுக்க வேண்டும். இதற்கு 3 வழிகள் உள்ளன. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, பணியின் போது மன இறுக்கத்தை தவிர்த்தல்
போன்ற மூன்று விஷயங்களும் இருதய நோய் வராமல் பார்த்துக் கொள்கின்றன.

ஒரு காலகட்டத்தில் பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாட்டில் அதிகமாக இருதய நோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் முறையே பால் மற்றும் பாம்ஆயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்தியாவில் பல எண்ணெய்களை உபயோகிக்கிறோம். கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்., உடற்பயிற்சி, திட்டமிட்ட அன்றாட வாழ்க்கை இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இருதய நோய் நிச்சயம் வரும்.

சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இருதயம் 100 வருடங்களுக்கு மேலாக செயல்படும். நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, டென்சன் ஆகியவற்றால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்போது 19 வயது வாலிபருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆண்டுக்கு 100 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் இரண்டு டம்ளருக்கு மேல் தேநீர் அதிகமாக குடிக்காதீர்கள். சாப்பாட்டில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்றுங்கள். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். மதியம் காலையில் சாப்பிட்டதைவிட சற்று குறைவாகவும் இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுங்கள். இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூங்கவேண்டும். இப்படி இருந்தால் இருதயத்தை நாம் பாதுகாக்க முடியும்.

Reactions:

1 comments :

குட் இன்பர்மேஷன்

தேங்க் யூ ...........

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!