பிரிட்டன் வாழ் தமிழர்கள் எதிர் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அன்று “Heart 2 Heart” என்னும் நடை பயணம் ஒன்றை பேர்மிங்காமில் இருந்து ஆரம்பித்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் வரை தொடரவுள்ளனர்.
இந்த நடை பயணத்திற்கு பிரிட்டன் வாழும் அனைத்து சமூகத்தவரையும் உள்வாங்கி அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் கடந்து முதன் முதலாக நடத்தப்படும் நடைபயணமாக இருக்குமென நம்பப்படுகிறது. இப்பயணமானது “The Royal British Legion” க்கும் ஈழத்தில் உள்ள ஆதரவற்றோர் இலங்களுக்கும் ஆதரவையும் நிதியையும் திரட்டும் நோக்கில் நடாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு நாள் நடைபயணத்தை பிரிட்டனின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் போராடி மடிந்த, மடிந்து கொண்டிருக்கின்ற மறவர்களை நினைவுகூரும் நவம்பர் இரண்டாம் தேதியில் பர்மிங்காமில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டன் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் எமது இளைய சமுதாயத்தினர் இன்று இந்நாடுகளின் அனுபவிக்கும் சுதந்திரத்தினை அடைவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தியாகங்களை நினைவுகூருவதோடு இன்றும் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் மக்களுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதும் இப்பாதயாத்திரையை ஏற்பாடு செய்பவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே பிரிட்டன் வாழ் அனைத்து மக்களின் பங்களிப்பினையும் ஆதரவினையும் அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
0 comments :
Post a Comment